Tuesday, June 5, 2018

நாம் சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கின்றோமா. அனைத்திற்கும் எதிர்ப்பு அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றோம். சமூக வலைதளத்தின் வலையில் சிக்கிக்கொண்டிருக்கின்றோம். சமூகத்தின்மீது அக்கறையுள்ளவர்களாக நடித்துக்கொண்டிருக்கின்றோம், சமூக வலைதளத்தில் கோபத்தை வெளிப்படுத்துவதன் மூலம் நாமும் சமூக ஆர்வலர்கள்தான் என்ற பிம்பத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.
இதுவரை சாதி மற்றும் மதத்தால் பிரிந்திருந்தோம் இப்பொழுது அப்பிரிவினையில் மொழியும் சேர்ந்துவிட்டது. மொழி அரசியலின் மூலம் நமக்கு கிடைக்கபோவது என்னமோ பிரிவினை மட்டும் தான் என்பதை உணர தவிர்க்கிறோம். நம்மை சுற்றியிருக்கும் அனைத்திற்கும் (அத்தியாவசியம் முதல் ஆடம்பரம் வரை) அரசியல் சாயலை பூசிவிட்டார்கள் - நாமும் அதற்கு துணை போய்விட்டோம், போய்க்கொண்டிருக்கின்றோம் என்பது தான் நிதர்சனம். நாகரீகத்திற்கு பெயர் போன நம் தமிழ் கலாச்சாரத்தை அநாகரீகமான கருத்துக்களை தமிழர்களாகிய நாம் வெளிப்படுத்தி கொச்சைப்படுத்திவிட்டோம். இணையம் நம்மை இணைக்கவில்லை பதிலுக்கு பிரித்துக்கொண்டிருக்கின்றது.