இணையத்தின் வளர்ச்சி... சுயசிந்தனையின் வீழ்ச்சி...
ஆமை புகுந்த வீடு விளங்காது என்று ஒரு பழமொழி தமிழில் உள்ளது. அந்த ஆமையில் மிகவும் முக்கியமான ஒன்று "அறியாமை". இன்று நம் அனைவரும் தத்தளித்து கொண்டிருப்பது இந்த அறியாமை சுழலில் தான்.
உலகத்தின் ஒட்டுமொத்த கருத்து என்பது இணையதளத்தின் வளர்ச்சியின் மூலம் அனைவருக்கும் விழிப்புணர்வு வந்து விட்டது என்பது தான், ஆனால் அவ்விழிப்புணர்வு பகுத்தறிவால் வந்த விழிப்புணர்வு அல்ல மாறாக இணையத்தின் தகவல் காட்டாற்றில் வந்திருக்கும் போலியான விழிப்புணர்வு. தகவலின் தரம் அறியாத விழிப்புணர்வு. அவ்விழிப்புணர்வால் இலவசமாக நமக்கு கிடைத்திருக்கும் மற்றொரு மோசமான உணர்வு காழ்புணர்வு.
தகவல் காட்டாற்றில், அறியாமை என்னும் சுழலில் சிக்கி சுயசிந்தனையையும், பகுத்தறிவையையும் இழந்து மூடர்களாய் காட்சி அளிக்கின்றோம்.
இணையதளத்தின் வளர்ச்சியின் மிக முக்கியமான ஒரு பயன் நம் உள்ளங்கையில் தகவல் அதுவும் நாம் விருபப்படும் நேரத்தில். இதில் வேடிக்கையான ஒன்று முன்பெல்லாம் நேரத்தின் பிடியில் நாம் இருந்தோம், இப்பொழுது நமது பிடியில் நேரம் இருக்கின்றது. அப்பொக்கிஷமான நேரத்தை வீண்ணடிக்காமல் தகவல் காட்டாற்றில் சிக்காமல் பகுத்தறிவை பயன்படுத்தி வளம் பெறுவோம்.
No comments:
Post a Comment