மதம் என்னும் மதம்...
மதம் என்றால் என்ன? இன்று நம்மிடையே பெரும் பிரிவினையை ஏற்படுத்துவதில் முதல் இடம் மதத்திற்கே. இதை பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தபொழுது ஒரு சிந்தனை ஒன்று தோன்றியது. இவ்வுலகில் வாழும் அனைத்து மக்களின் அன்றாட வாழ்வியலை ஊர்ந்து கவனித்தோமானால் நமக்கு ஒன்று நன்றாக புரியும், அது என்னவென்றால் இவ்வுலகில் மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தும் ஒன்றே. தேவைகளிலும் சரி அத்தேவைகளை பூர்த்தி செய்யும் முறைகளிலும் சரி அனைத்து மக்களிடையே ஒரு ஒற்றுமை உள்ளது. நாம் அனைவரும் கடினமாக உழைப்பதற்கான முக்கிய காரணம் முதலில் நாம் நன்றாக இருக்க வேண்டும், நாம் நன்றாக இருந்தால் நம் குடும்பம் நன்றாக இருக்கும் - இது இவ்வுலகத்தில் வாழும் அனைத்து ஜீவன்களுக்கும் உண்டான ஒரு ஒற்றுமை. மற்றொரு ஒற்றுமை மக்களின் இறைவழிபாட்டில், நாம் அனைவரும் மன அமைதிக்காகவும், நமது அடிப்படை தேவைகள் பூர்த்தியடைவதற்காகவும், வாழக்கை இன்னல்களில் இருந்து விடுபடுவதற்காகவும் மற்றும் சந்தோஷமான வாழக்கைக்காகவும் இறைவனிடம் வேண்டுகிறோம், அவ்வேண்டுதல் முறையில் வேற்றுமை இருக்கலாம் ஆனால் அவ்வேண்டுதலுக்கான காரணத்தில் ஒற்றுமையே இருக்கின்றன.
இவ்வுலகில் மனித இனம் தங்கள் அறிவால் கண்டறிந்த அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் வியப்பூட்டக்கூடியவை அதில் மிகவும் முக்கியமான ஒன்று வாழ்விற்கு அடையாளமான இவ்வுலகையே அழிக்கும் திறன் கொண்ட கண்டுபிடிப்புகள். இப்படி ஏராளமான துரைகைளில் சாதித்த சாதித்துக்கொண்டிருக்கும் நம்மால் ஏன் இந்த மனித வாழ்வியலின் ஒற்றுமையை காண அல்லது உணர இயலவில்லை அல்லது கண்டும் காணாதது போல் நடித்துக்கொண்டிருக்கிறோமா...
மனித வாழ்வியலின் ஒற்றுமையை உணர்வோம். மதம், சாதி என்ற கோட்பாடுகளில் இருந்து விடுபட்டு, மனிதத்தை வளர்ப்போம்...
No comments:
Post a Comment