Tuesday, June 5, 2018

நாம் சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கின்றோமா. அனைத்திற்கும் எதிர்ப்பு அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றோம். சமூக வலைதளத்தின் வலையில் சிக்கிக்கொண்டிருக்கின்றோம். சமூகத்தின்மீது அக்கறையுள்ளவர்களாக நடித்துக்கொண்டிருக்கின்றோம், சமூக வலைதளத்தில் கோபத்தை வெளிப்படுத்துவதன் மூலம் நாமும் சமூக ஆர்வலர்கள்தான் என்ற பிம்பத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.
இதுவரை சாதி மற்றும் மதத்தால் பிரிந்திருந்தோம் இப்பொழுது அப்பிரிவினையில் மொழியும் சேர்ந்துவிட்டது. மொழி அரசியலின் மூலம் நமக்கு கிடைக்கபோவது என்னமோ பிரிவினை மட்டும் தான் என்பதை உணர தவிர்க்கிறோம். நம்மை சுற்றியிருக்கும் அனைத்திற்கும் (அத்தியாவசியம் முதல் ஆடம்பரம் வரை) அரசியல் சாயலை பூசிவிட்டார்கள் - நாமும் அதற்கு துணை போய்விட்டோம், போய்க்கொண்டிருக்கின்றோம் என்பது தான் நிதர்சனம். நாகரீகத்திற்கு பெயர் போன நம் தமிழ் கலாச்சாரத்தை அநாகரீகமான கருத்துக்களை தமிழர்களாகிய நாம் வெளிப்படுத்தி கொச்சைப்படுத்திவிட்டோம். இணையம் நம்மை இணைக்கவில்லை பதிலுக்கு பிரித்துக்கொண்டிருக்கின்றது. 

Wednesday, April 18, 2018

வலையில் சிக்கிய சமூகம் - சமூகவலைத்தளம் !!!

எங்கே சென்று கொண்டிருக்கின்றது நமது சமூகம். அனைவரும் ஒருவிதமான அவசரத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றோம். சமூகம் என்பது சமூகவலைத்தளமாகிவிட்டது, கருத்துச்சுதந்திரம் சிதைந்துபோய்விட்டது. சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை கண்டு அனைவரும் பொங்கியெழுகின்றார்கள் சமூகவலைத்தளங்களில் - சமூகத்தில் அல்ல. அனைத்திற்கும் அனைவரும் கருத்துகளை சரமாரியாக பரிமாறிக்கொள்கிறோம், மறுநிமிடமே அக்கருத்திற்கு எவ்வளவு கமெண்டுகளும், லைக்ஸ்களும் வரும் என்று ஆவலுடன் காத்திருக்கின்றோம். அனைத்து நிகழ்வுகளுக்கும் அனைவரும் கருத்து சொல்லவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு நமது சமூகத்திற்கு விஷமானது. ஒரு பிரச்சனை என்றால் ஒரு காரணமும் ஒரு விளைவும் கண்டிப்பாக இருக்கும், அதேபோல் அப்பிரச்னைக்கு தீர்வே இறுதியானது கருத்துக்கள் இல்லை என்ற புரிதல் நமக்கு அவசியமானது.

Saturday, April 14, 2018

மாசற்ற உணவும், சிந்தனையும் மகத்தானது...


இவ்வுலகில் மனிதன் உயிர்வாழ்வதற்கு மிகமுக்கியமான மூன்று அடிப்படை தேவைகள் உன்ன உணவு, உடுத்த உடை, இருக்க வீடு. இம்மூன்றில் முதலிடம் உணவிற்கே, ஏனென்றால் மனிதன் வயிற்றுப்பசிக்கு உணவே சிறந்த மருந்தாகும். "பசி வந்தால் பத்தும் பறக்கும்" என்று தமிழில் ஒரு பழமொழி உள்ளது. அதன் அர்த்தம் என்னவென்றால் - மனிதனுக்கு பசி எடுக்கும் பொழுது மனித நற்பண்புகளான அன்பு, அருள், இரக்கம், கருணை, மானம், உண்மை, அறிவு, குடிப்பிறப்பு, நன்மதிப்பு, நேர்மையாக நடத்தல் ஆகிய அனைத்தும் ஒருவனை விட்டு நீங்கிவிடும் என்பதே. இப்பழமொழியை ஊர்ந்து கவனித்தோமானால் ஒன்று நன்றாக புரியும் - இச்சமுதாயத்தில் ஒருவன் தனது நற்பண்புகளை காத்து நற்பெயரை சம்பாதிப்பதற்கு பெரும் உந்துகோலாக இருப்பது "பசி" மட்டுமே. ஆனால் அப்பசி என்ற உணர்வு பல சமயங்களில் பிணியாகவும் காட்சியளிக்கின்றது. ஏனென்றால் பசிக்காக இவ்வுலகில் பல குற்றங்கள் நிகழ்ந்துக்கொண்டே இருக்கின்றது.

அக்குற்றங்களை இரண்டாக பிரித்துக்கொள்ளலாம் தனி மனித குற்றம், உலகளாவிய குற்றம். தனி மனித அளவில் நடக்கும் குற்றங்களால் மனித இனத்திற்கே பெரிய பாதிப்பு ஒன்றும் இல்லை ஆனால் உலக அளவில் பசியை போக்குவதற்காக நடக்கும் குற்றங்களில் முதன்மையான இடம் இயற்கையை போற்றும் வேளாண்துறையில் செயற்கையின் பங்களிப்பே. இயற்கையின் எதிர்சொல் தான் செயற்கை. மனிதன் எவ்வளவு முயன்றாலும் இயற்கையின் நன்மதிப்புகளை செயற்கையில் பெற இயலாது. இவ்வுலகத்தில் மிகச்சிறந்த மருந்து உணவே - அவ்வுணவு இயற்கையானதென்றால் அது மருந்தாகும் அதுவே செயற்கையானதாக இருந்தால் அதுவே விஷமாகவும் இருக்கும். இயற்கையும் செய்ற்கையும் என்றைக்குமே முரணாகத்தான் இருக்கும் என்ற புரிதல் நமக்கு அவசியமான ஒன்று. இவ்வுலகம் தோன்றிய காலம் முதலே பல பரிணாம வளர்ச்சிகளை கண்டிருக்கின்றது - அதில் மிக முக்கியமான ஒன்றுதான் மனிதனின் சிந்தனையும் செயலாற்றலும். அச்சிந்தனையின் மூலமே பதினெட்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில் மனித வாழ்வை முற்றிலும் மாற்றி அமைத்த தொழிற்புரட்சி தோன்றியது. அத்தொழிற்புரட்சியால் அணைத்து துறையிலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. விஞ்ஞானிகளின் சிந்தனைக்கு ஏற்ற உணவாக அமைந்தது அப்புரட்சி. மனித வாழ்வியலையே மாற்றியமைத்தது. அணைத்து துறைகளையும் ஒரு புயலைப்போல புரட்டியெடுத்தது என்று தான் கூறவேண்டும். அப்புயலின்தாக்கம் வேளாண்துறையையூம் விட்டுவைக்கவில்லை. 

மனித சிந்தனையின் கொடூரக்குழந்தையே செயற்கை முறையில் உணவு தயாரிப்பதை கண்டறிந்தது. அக்கண்டுபிடிப்பை இக்கணமும் நாம் அனைவரும் கொண்டாடிக்கொண்டுதான் இருக்கின்றோம் - அதன் பின்விளைவுகளை கருதாமல்.  வேளாண்துறையில் பலவிதமான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தது. அனைத்தும் ஒன்றையே நோக்கியிருந்தது - மனித வாழ்வை எளிமையாக்குவதையே. நம்முடைய அனைத்து செயல்களுக்கும் ஒரு காரணமும் அதனால் ஒரு விளைவும் கண்டிப்பாக இருக்கும், இதனை ஆங்கிலத்தில் காஸ் & எபெக்ட் தியரி என்று கூறுவார்கள். வேளாண்துறையில் பயிர் உற்பத்தியிலிருந்து உணவை மேம்படுத்துவது வரையில் அனைத்திலும் இன்று செயற்கை முறை தான் பெரும்பாலும் பின்பற்றப்படுகின்றது. அதற்கு முக்கிய காரணம் மனிதனின் சிந்தனையை சிதைக்கும் "ஆசை" என்ற பேராபத்துதான். கடவுள் மனிதனுக்கு அளித்த மிகமுக்கியமான பண்பு சிந்தித்து செயல்படுவது, அப்படி சிந்திக்கும் மனிதன் அச்சிந்தனையை செயலாக்கும் பொழுது அதன் நற்பண்புகளையும் தீயபண்புகளையும் ஆராய்ந்து செயல்படவேண்டும். ஆனால் அத்தகைய ஆராயும் திறனை மனிதனின் "ஆசை" அவனது மூளையை நெருங்கவிடாது. செயற்கை முறையில் விளைச்சலை அதிகரித்து, லாபத்தை பல மடங்குகளாக உயர்தலாம் என்ற மனிதனின் "ஆசை" வாழ்வின் முதன்மை தேவையான உண்ணும் உணவை மாசுபடுத்திவிட்டது. மனித எண்ணம் ஆசையால் மாசுபடிந்திருக்குமேயானால், அவன் செயல்களும் மாசடைந்தே இருக்கும். செயற்கை விவசாயம் என்ற பெயரில் பலவிதமான ரசாயன உரங்களை பூமியில் செலுத்தி அதன் இயற்க்கை தன்மையை அழித்து மலடாக்கி விட்டோம். 

உலக அரசியலில் செயற்கை விவசாயம் பெரும் பங்கினை வகிக்கின்றது, ஏனென்றால் இதை கண்டறிந்த மேற்கத்திய பண முதலைகள் கிழக்கை அக்கண்டுபிடுப்புக்கான சந்தையாக மாற்றிவிட்டார்கள். மற்றவர்களின் பயம் நமது பலம் என்பார்கள், அதுபோலவே கிழக்கத்திய நாடுகளில் உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டுவிடும் என்ற பயத்தினை பரப்பி இயற்கையில் வாழ்ந்துகொண்டிருந்த நம்மை செயற்கை முறைக்கு குடிபெயர்த்துவிட்டார்கள். சுவாமி விவேகானந்தர் அன்று சொன்னது போல் - கிழக்கத்திய மக்களுக்கு ஒன்றை நம்பவைக்கவேண்டுமென்றால் அது மேற்கில் இருந்துதான் வந்தாகவேண்டும். அவர் பதினெட்டாம் நூற்றாண்டில் சொன்னதிற்கு ஏற்றவாறு நாம் இன்று வரை மேற்கில் இருந்து ஏத்துவந்தாலம் பேணிப்போற்றுகின்றோம். 

இன்றைக்கு இச்செயற்க்கையின் பிடியில் இருந்து விடுதலை அடைவதற்கு நாம் என்னற்ற வழிகளை மேற்கொண்டுவருகிறோம். அதன்படி நமது சிந்தனையை இயற்க்கை விவசாயத்தில் செலுத்தி அதன் நற்பண்பினை ஆராய்ந்து, ஆசையை கட்டுக்குள்வைத்து ஒரு முடிவெடுத்தோமானால் நமது அடுத்த தலைமுறையினருக்கு இவ்வுலகை ஒரு பூந்தோட்டமாக பரிசளிக்க முடியும் இல்லையேல் இவ்வுலகம் ஒரு இடுகாடாக தான் மாறும். அகம் மாற்றமடைந்தால் புறம் தானாக மாற்றமடையும் என்பதை புரிந்து வழிநடப்போம். செயற்க்கையை தவிர்த்து இயற்கையை பேணிக்காப்போம்.

Monday, April 9, 2018

நம்மிடையே பொதுவாக ஒரு கருத்து நிலவுகிறது அதாவது திருமண வாழ்வில் பெண்களைவிட ஆண்களே அதிகமாக சம்பாதிக்கவேண்டும் என்பது. இக்கருத்தையுடையவர்கள் முட்டாள்தனத்தின் உச்சத்தை ப்ரதிபலிக்கின்றவர்களாவார்கள். ஏனென்றால் இவ்வுலகில் வாழும் உயிரினங்களில் மனித இனம் மட்டும் தான் இப்படி ஒரு முட்டாள்தனமான கருத்தையுடைவர்கள். நம் சமூகத்தில் என்றைக்கு ஆணும் பெண்ணும் சமம் என்ற ஒன்று சொல்லில்மட்டுமில்லாமல் மக்களின் எண்ணஓட்டத்திலும் செயலிலும் ப்ரதிபலிக்கின்றதோ அன்றைக்குத்தான் நாம் நெஞ்சை நிமிர்த்தி சொல்லமுடியும் நாம் முன்னேறிவிட்டோமென்று. 

திருமணத்திற்கு ஒழுக்கத்தை பாருங்கள் பணப்புழக்கத்தை அல்ல !!! ஒருவனிடம் ஒழுக்கம் இருந்தால் வாழ்க்கையை நடத்துவதற்கான பணப்புழக்கமும் வாழ்க்கையில் உயர்வும் தானாக வந்தடையும்.

"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்".

இக்கருத்தை என்னுளே இருந்து வெளிப்படுத்தியத்திற்கு காரணமாக இருந்த மூடர்களாக இருக்கும்  என் குடும்பமக்களுக்கு (அனைவரும் அல்ல சிலர் மட்டுமே) மிக்கநன்றி. புரிந்தவர்களுக்கு பிடிக்காவிட்டால் தயவு செய்து நீங்களே என்னை உங்கள் முகநூலில் இருந்து நட்பழி செய்துவிடுங்கள்.
என்றைக்கு தமிழர்கள் நடிகர்களை நடிகர்களாக பார்க்கிறார்களோ அன்றைக்கு தான் தமிழகத்திற்கு வெளிச்சம். அதற்காக நடிகர்கள் அரசியலுக்கு வருவது தவறு என்று கூறவில்லை, இந்தியா ஜனநாயக நாடு எனவே யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் ஆனால் அரசியலுக்கு வருபவர்கள் நல்ல குடிமகன்களாக இருக்க வேண்டுமேதவிர நல்ல நடிகர்களாக அல்ல. மக்கள் நடிகர்களை கொண்டாடுவதை தவிர்த்தாலே போதும் அவர்கள் அவர்களுடைய வேலையை  பார்த்துவிட்டு செல்வார்கள். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து பொழுது இருந்த நிலை வேறு இன்றைக்கு இருக்கும் நிலை வேறு. அன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு தங்களுடைய கருத்தை எளிதில் எடுத்துச்செல்லவும் புரியவைப்பதற்கும் சினிமாவை ஒரு சாதனமாக பயன்படுத்தினார்கள், இதை மக்கள் அன்றைக்கே புரிந்துகொண்டிருந்தார்கள் என்றால் தமிழகத்திற்கு நல்ல தலைவர்களை உருவாகியிருக்க முடியும். நம்முடைய முன்றைய தலைமுறை தமிழகத்தில் நல்ல நடிகர்களை உருவாக்கியதன் விளைவை நாம் இன்று அனுபவித்து  கொண்டிருக்கின்றோம். ஒரு தலைவனின் பேச்சாற்றலில் மயங்காமல் அவனிடம் நல்ல செயலாற்றல் இருக்கின்றதா என்று பார்க்கவேண்டும். பேச்சுத்திறனை விட செயல்திறன் மிகவும் முக்கியம். முன்றைய தலைமுறை செய்த தவரை நாம் மறுபடியும் செய்ய வேண்டாம். 

Sunday, April 8, 2018

தமிழகத்தில் திராவிட அரசியலின் பெரும் சாதனை மக்களிடம் சாதி & மொழி பிரிவினை உண்டாக்கியது  மற்றும் பகுத்தறிவை வளர்க்கிறோம் என்ற பெயரில் தமிழர்களை மூடர்களாகியது. என்றைக்கு சாதி என்ற பிணியில் இருந்து தமிழன் விடுபடுகிறானோ அன்றைக்கு தான் நம் தமிழ்நாடு ஒற்றுமையான நாடாக மாறும். மக்களே தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் சாதி என்பது நமது கலாச்சாரம் அல்ல.இந்த மாற்றத்தை அரசியல்வாதிகள் கொண்டுவருவார்கள் என்று எதிர்பார்த்தால் அது நம் முட்டாள்தனம் ஏனென்றால் இப்பிரிவினை தான் அவர்களின் வளர்ச்சிக்கான சொத்து. தமிழ் பழமையான மொழி தான் அதில் மாற்றுக்கருத்தே கிடையாது ஆனால் மற்ற மொழிகளையும் நாம் கற்றுக்கொள்ளவேண்டும் மதிக்கவும்வேண்டும். இன்று உலகமையமாக்குதலின் விளைவாக வேலைவாய்ப்பு என்பது ஒரு சமுத்திரம் போல இவ்வுலகம் முழுவதும் பரவி கிடக்கின்றது ஆகையால் தமிழை நேசிப்போம் மற்ற மொழிகளையும் ஆதரித்து கற்றுக்கொள்ளவோம். தமிழன் வளர்ந்தால் தான் தமிழ் வளரும், இதை இளைஞர்களாகிய நாம் பபுரிந்துகொண்டு தமிழை தமிழகத்தை தமிழனை வளர்ச்சி பாதையில் வழிநடத்துவோம்.

Friday, March 2, 2018

மதம் என்னும் மதம்... 

மதம் என்றால் என்ன? இன்று நம்மிடையே பெரும் பிரிவினையை ஏற்படுத்துவதில் முதல் இடம் மதத்திற்கே. இதை பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தபொழுது ஒரு சிந்தனை ஒன்று தோன்றியது. இவ்வுலகில் வாழும் அனைத்து மக்களின் அன்றாட வாழ்வியலை ஊர்ந்து கவனித்தோமானால் நமக்கு ஒன்று நன்றாக புரியும், அது என்னவென்றால் இவ்வுலகில் மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தும் ஒன்றே. தேவைகளிலும் சரி அத்தேவைகளை பூர்த்தி செய்யும் முறைகளிலும் சரி அனைத்து மக்களிடையே ஒரு ஒற்றுமை உள்ளது. நாம் அனைவரும் கடினமாக உழைப்பதற்கான முக்கிய காரணம் முதலில் நாம் நன்றாக இருக்க வேண்டும், நாம் நன்றாக இருந்தால் நம் குடும்பம் நன்றாக இருக்கும் - இது இவ்வுலகத்தில் வாழும் அனைத்து ஜீவன்களுக்கும் உண்டான ஒரு ஒற்றுமை. மற்றொரு ஒற்றுமை மக்களின் இறைவழிபாட்டில், நாம் அனைவரும் மன அமைதிக்காகவும், நமது அடிப்படை தேவைகள் பூர்த்தியடைவதற்காகவும், வாழக்கை இன்னல்களில் இருந்து விடுபடுவதற்காகவும் மற்றும் சந்தோஷமான வாழக்கைக்காகவும் இறைவனிடம் வேண்டுகிறோம், அவ்வேண்டுதல் முறையில் வேற்றுமை இருக்கலாம் ஆனால் அவ்வேண்டுதலுக்கான காரணத்தில் ஒற்றுமையே இருக்கின்றன. 

இவ்வுலகில் மனித இனம் தங்கள் அறிவால் கண்டறிந்த அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் வியப்பூட்டக்கூடியவை அதில் மிகவும் முக்கியமான ஒன்று வாழ்விற்கு  அடையாளமான இவ்வுலகையே அழிக்கும் திறன் கொண்ட கண்டுபிடிப்புகள். இப்படி ஏராளமான துரைகைளில் சாதித்த சாதித்துக்கொண்டிருக்கும் நம்மால் ஏன் இந்த மனித வாழ்வியலின் ஒற்றுமையை காண அல்லது உணர இயலவில்லை அல்லது கண்டும் காணாதது போல் நடித்துக்கொண்டிருக்கிறோமா...

மனித வாழ்வியலின் ஒற்றுமையை உணர்வோம். மதம், சாதி என்ற கோட்பாடுகளில் இருந்து விடுபட்டு, மனிதத்தை வளர்ப்போம்...

Tuesday, February 27, 2018

மெய்யறிவு 

திடீர் என்று ஒரு நாள் நம் வாழ்வில் இருந்து கவலை என்ற ஒன்று காணாமல்போய்விட்டால் இவ்வுலகில் பலரும் தாங்கள் இறந்து விட்டதாக நினைத்துக்கொள்வார்கள். பலரும் தங்கள் வாழ்வில் ஒரு பிரச்சினையோடு போராடி கவலைக்கொள்வதையே வாழ்வதற்க்கான அடையாளமாக கருதுகிறார்கள். சிறிதளவு ஊர்ந்து கவனித்தோமானால் கவலை, சந்தோஷம் மற்றும் பல சுகங்களும் இன்னல்களும் நம் சிந்தனையின் குழந்தைதான் என்பதை உணர்வோம். இதை எழுதும் பொழுதும் படிக்கும் பொழுதும் வருகிற சிந்தனை நம் வாழ்வில் ஒரு சுகமோ அல்லது ஒரு இன்னலோ வரும் பொழுது நம்மால் உணர இயலாது. எவனொருவன் தன்னை நன்கு அறிந்து உணர்கிறானோ அவனே மெய்ஞ்ஞானம் பெற்றவனாவான். 

பல மாதங்களுக்கு பிறகு நான் என் முகநூல் கணக்கில் புகுபதிவு செய்தேன், என்னுடைய காலக்கோட்டில் என் நண்பர்களின் பதிவுகள் அனைத்தும் சிரியாவில் நடக்கும் போரைப்பற்றியும் ஸ்ரீதேவியின் இறப்பைப்பற்றியும் இருந்தன. இரண்டு நிகழ்வுக்கும் ஒரு ஒற்றுமை அழிவு தான். அவ்வழிவை செய்தி என்ற ஒரு பொருளாக்கி வியாபாரம் செய்யும் ஊடகங்களின் சந்தையாக மக்களை ஆக்கிவிட்டார்களே என்று நினைக்கும் பொழுது வேதனை அளிக்கின்றது. சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமான ஒன்று மீம்ஸ், அக்காலத்தில் தினசரிகளில் அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளை கேலிச்சித்திரமாக வரைந்து மக்களுக்கு புரியவைப்பார்கள். அவை கேலியாக இருந்தாலும் சிந்தனையை தூண்டும் வகையில் இருக்கும். ஆனால் இன்று மீம்ஸ் எனப்படும் கேலிக்கூற்றில் சிந்தனை சிறிதளவிலும் சிரிப்பும் அவதூறும் பெரிதளவிலும் உள்ளது.என்றைக்கும் சிரிப்பும் சிந்தனையும் சமமாக இருக்க வேண்டும், அப்படி இருக்கும் சமூகமே மெய்யறிவாய்ந்த சமூகம்.

Monday, February 26, 2018

மாற்றுப்பயணம்

தமிழகத்தில் இன்று பலரின் கருத்து நாட்டின் அரசியலில் ஒரு மாற்றம் வேண்டும் என்பது தான். அக்கருத்தினால் ஒரு மிக பெரிய குழப்பம் நிலவி வருகின்றது, அதன் காரணம் தலைமையேற்று நடத்தும் ஆற்றல் இல்லாத தலைவர்களை தேர்ந்தெடுத்த மக்கள். 

மாற்றம் ஒன்று தான் மாறாதது ஆனால் அம்மாற்றம் எதில் வேண்டும் - நாட்டின் அரசியலில்லா அல்லது அரசியல்வாதிகளில்லா அல்லது அரசியல் செய்யும் அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்கும் மக்களின் எண்ணஓட்டத்தில்லா. இப்படி அம்மாற்றத்திற்கு பல பரிமாணங்களை அடுக்கி கொண்டே போகலாம். இதில் நாம் புரிந்துக்கொள்ளவேண்டிய ஒன்று என்னவென்றால் மக்களாட்சி அரசியல் கட்டமைப்பில் நாட்டின் தலைமைத்துவம் என்பது அந்நாட்டின் மக்களையே ப்ரதிபலிக்கின்றது என்பதையே. 

மாற்றம் எண்ணத்தில் மட்டுமில்லாமல் செயலிலும் வேண்டும் இல்லையேல் நாற்றமும் ஏமாற்றமும் தான் முடிவு என்பதை உணர்வோம்... வாக்களிப்போம்... புதிய தமிழகத்தை உருவாக்குவோம்...

Saturday, February 24, 2018

கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு ….

Traditionally, Black is considered to be an inauspicious colour, be it in any form. I got self instigated to write on this topic, as “Black” is my favourite colour. When the world was created everything which existed was fresh and without any discrimination. But when the human beings discovered the art of differentiation and discrimination everything began to dissipate drastically.
Black is considered to be a colour of evil especially in the Indian society. I always wonder of the evolution of the mankind and when these traditions, rituals and other superstitions were discovered. Men when compared with the beasts are equipped additionally with an extra sense which led the mankind to excel in every field and also in its deterioration by teaching the art of discrimination which ultimately resulted in the great battles.
Black is also considered to be a colour of mourning. The thought of the human beings have created all these stupidiotic traditions and has been subsequently followed for millennia without a single person revolting against the traditions. Since there was an absolute majority of people following these traditions anyone who revolted against them were tainted as an extremist in the society. Black is a natural and a beautiful colour but in our society it is the discriminated colour in whatever forms it may be in. From outfits, vehicles, utility devices till God, we have discriminated based on the colour. I came to know from my father that black is the colour of the “Saturday God” (Sani Bhagwan in tamil) and our ancestors have also provided him with a vehicle which is a “crow” which is also in Black, similarly each and every graven image in our country are allocated with a specific colour and a vehicle. As a child I began to dwell in this fatuous society but as I grew older physically as well as psychologically I came out of this tradition of worship which based on imaginary image beautified by using various colours.
When I was just whiling away my time by browsing the net I came across a matrimonial advertisement in which it was mentioned “a fair and a good looking girl needed for their son”, although our constitution provides for an equality before law and prohibition of discrimination on grounds of religion, race, caste, sex, colour, creed and place of birth, we violate the law promulgated by the government as well as the law of mankind(which must be in accordance with our conscience) by discriminating a matrimonial alliance on the basis of colour.
On one occasion I wore a black outfit since it’s my favourite colour but I was questioned as to whether I belong to a particular political party as it was their uniform colour.  I also heard many people tell that black is the colour of darkness and people who wear outfits in that colour are always in the dark. I would like to tell them that Black is the only colour which does not have any colour in it i.e. it’s achromatic in nature and by wearing that, we are not nocturnal creatures but it’s our passion for that colourless colour. We, first as Human Beings irrespective of all our intangible assets in the name of religion, caste, race, colour, creed, envy, jealous etc., through which we are discriminated in our short span of life should come forward and eliminate the myth invented by our ancestors. It should not be “Unity in Diversity” rather it must be only Unity among the world citizens.
It would also be great if the people jump out of their myths and fundamentalisms, and begin to live in accordance with their conscience and with a greater degree of unsympathetic empathy towards their co-citizens. I also wish that we must not discriminate anyone based on the external appearance or colour instead be conscious and intelligent because there are also snakes with good as well as bad essence in them but both belong to the snake family.
“It is only in the darkness of the Sky we can evidence the beauty of the celestial bodies”
இணையத்தின் வளர்ச்சி... சுயசிந்தனையின் வீழ்ச்சி...

ஆமை புகுந்த வீடு விளங்காது என்று ஒரு பழமொழி தமிழில் உள்ளது. அந்த ஆமையில் மிகவும் முக்கியமான ஒன்று "அறியாமை". இன்று நம் அனைவரும் தத்தளித்து கொண்டிருப்பது இந்த அறியாமை சுழலில் தான். 

உலகத்தின் ஒட்டுமொத்த கருத்து என்பது இணையதளத்தின் வளர்ச்சியின் மூலம் அனைவருக்கும் விழிப்புணர்வு வந்து விட்டது என்பது தான், ஆனால் அவ்விழிப்புணர்வு பகுத்தறிவால் வந்த விழிப்புணர்வு அல்ல மாறாக இணையத்தின் தகவல் காட்டாற்றில் வந்திருக்கும் போலியான விழிப்புணர்வு. தகவலின் தரம் அறியாத விழிப்புணர்வு. அவ்விழிப்புணர்வால் இலவசமாக நமக்கு கிடைத்திருக்கும் மற்றொரு மோசமான  உணர்வு காழ்புணர்வு.

தகவல் காட்டாற்றில், அறியாமை என்னும் சுழலில் சிக்கி சுயசிந்தனையையும், பகுத்தறிவையையும் இழந்து மூடர்களாய் காட்சி அளிக்கின்றோம். 

இணையதளத்தின் வளர்ச்சியின் மிக முக்கியமான ஒரு பயன் நம் உள்ளங்கையில் தகவல் அதுவும் நாம் விருபப்படும் நேரத்தில். இதில் வேடிக்கையான ஒன்று முன்பெல்லாம் நேரத்தின் பிடியில் நாம் இருந்தோம், இப்பொழுது நமது பிடியில் நேரம் இருக்கின்றது. அப்பொக்கிஷமான நேரத்தை வீண்ணடிக்காமல் தகவல் காட்டாற்றில் சிக்காமல் பகுத்தறிவை பயன்படுத்தி வளம் பெறுவோம்.